search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி அதிபர் கொலை"

    • கொலை குறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
    • கருப்பசாமியின் ஆதரவாளர்கள் அங்கு வந்து சக்திவேலை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52). லாரி அதிபர். இவர் சங்கரப்பேரி ரோட்டில் லாரி புக்கிங் அலுவலகமும் நடத்தி வந்தார்.

    நேற்று மாலை அவர் தனது அலுவலகத்தில் இருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென 2 நாட்டு வெடிகுண்டுகளை சக்திவேல் மீது வீசினர். அதில் இருந்து தப்பித்த சக்திவேல் அங்கிருந்து வெளியே ஓட முயன்றார். ஆனால் அதற்குள் 4 பேர் கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.

    இந்த கொலை குறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவரது தலைமையிலும், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் தலைமையிலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    கடந்த 2017-ம் ஆண்டு சங்கரப்பேரியில் அங்குசாமி என்ற ஈசுவரன் என்பவரை குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி உள்பட 5 பேர் சேர்ந்து கொலை செய்தனர். இந்தநிலையில் அங்குசாமியின் ஆதரவாளர்கள் கடந்த ஜனவரி மாதம் சங்கரப்பேரியில் வைத்து கருப்பசாமியை வெட்டிக்கொலை செய்தனர். இந்த வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்ட சக்திவேல் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்துக்கு பிறகு பழிக்குப்பழியாக அவரை கொலை செய்ய கருப்பசாமி தரப்பினர் திட்டம் தீட்டி உள்ளனர். இது சக்திவேலுக்கு தெரிய வந்ததால், அவர் பாதுகாப்பாக இருந்து வந்தார். அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் தனது அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலையில் தான் அவர் முதல் முறையாக அலுவலகத்துக்கு வந்து வெளியே அமர்ந்துள்ளார். இதனை அறிந்த கருப்பசாமியின் ஆதரவாளர்கள் அங்கு வந்து சக்திவேலை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து மாவட்ட எல்லைகள் மற்றும் அண்டை மாவட்டங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தீவிர வாகன தணிக்கையும் நடத்தப்பட்டது. இதற்கிடையே விருதுநகர் மாவட்டத்தில் நடந்த வாகன சோதனையில் 2 பேர் சந்தேகத்திற்கிடமாக பிடிபட்டனர். அவர்களை போலீசார் விசாரித்தபோது, தூத்துக்குடியில் சக்திவேலை கொலை செய்து விட்டு தப்பி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து விருதுநகர் போலீசார், தூத்துக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்ற தனிப்படையினர் 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×